WhatsAppஇல் அறிமுகமாகிய “சேனல்” அம்சம்!
வாட்ஸ்அப் தளத்தில் ‘சேனல்ஸ்’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் சேனல்ஸ் எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் போல இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அட்மின்கள் அல்லது தனிநபர்கள் போட்டோ, டெக்ஸ்ட், வீடியோ, ஸ்டிக்கர்ஸ், வாக்கெடுப்பு போன்றவற்றை நடத்த முடியும். இதில் அட்மின் மற்றும் ஃபாலோயர்களின் பிரைவசிக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு வாட்ஸ்அப் கணக்கை பின்தொடர்பவர்கள் சக ஃபாலோயர்கள் குறித்த விவரங்களை அறிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென ‘அப்டேட்ஸ்’ எனும் டேபை வாட்ஸ்அப் தளத்தில் மெட்டா சேர்த்துள்ளது. இதில் பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் சேனல்களில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் சாட், மின்னஞ்சல் மற்றும் ஆன்லைன் போஸ்ட் மூலம் பயனர்கள் சேனல்ஸ் அம்சத்தை அக்சஸ் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் வாட்ஸ்அப் சேனல்ஸில் பகிரப்படும் தகவல்களுக்கு ரியாக்ட் செய்யலாம். கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மற்றும் வணிக நோக்க ரீதியாக இயங்குபவர்களுக்கு சேனல்ஸ் அம்சம் உதவும் என தெரிகிறது.