ஜெர்மனியில் மாற்றமடையும் விதிகள் – வீடு கட்டுவோர், வாடகைக்கு பெறுவோருக்கு பாதிப்பு

ஜெர்மனியின் பிராங்பேர்ட் வீடுகளை கட்டுவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்குமான விதிகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் கட்டுபவர்களுக்கு அதிக உதவிகளை வழங்குவதற்கும் வாடகைக்கு குடியிருக்க வருபவர்களுக்கு அதிக வாடகை பணம் வசூலிக்கவும் நகர சபை ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்படி, பிராங்பேர்ட்டில் வாடகைக்கு குடியிருக்க செல்வோர் இனிமேல் அதிக பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய வாடகை ஒரு சதுர மீட்டருக்கு 5 யூரோவிலிருந்து 6.50 யூரோவாக உயர உள்ளது.
கட்டணம் மாற்றியமைக்கப்பட்டாலும் ஜெர்மனியின் மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு வாடகை கட்டணம் குறைவு என கருதப்படுகின்றது.
இனிவரும் காலங்களில் பிராங்பேர்ட்டில் பணிபுரியும் கட்டுமான தொழிலாளிகள் விலையுயர்ந்த ஆற்றல் சேமிப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை.
சில நகர சபை உறுப்பினர்கள் இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஏனையோர் இது அதிக வீடுகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் உருவாக்க உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
2020 ஆம் ஆண்டிலிருந்து கட்டிடச் செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், பல கட்டிடத் திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் நகர சபை கூறுகின்றது.
இந்த புதிய விதிகளால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கூறப்படுகின்றது.