சிங்கப்பூரில் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் – விரைவில் புதிய நடைமுறை
சிங்கப்பூரில் போக்குவரத்து விதிகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் சட்டமூலத்தை உள்துறைத் துணையமைச்சர் முகமதுபைஷல் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.
மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் வாகனமோட்டிகள் புரியும் குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனைகளில் குறைப்புகள் மேற்கொள்ள முடியும்.
முதன்முறை கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியவர்களுக்குக் கட்டாய குறைந்தபட்சத் தண்டனையை அகற்றுவது பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்றாகும்.
மறுமுறை குற்றம் புரிவோருக்கான கட்டாய குறைந்தபட்சத் தண்டனையும் குறைக்கப்படும்.
மரணத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கு 4 ஆண்டுகளுக்குப் பதில் 2 ஆண்டுகளும் கடுமையான காயத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பதில் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
ஆனால் அந்தக் குற்றங்களுக்குரிய அதிகபட்ச தண்டனைகளில் மாற்றங்கள் இருக்காது.
அதேபோல குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கான அதிகபட்சத் தண்டனையில் மாற்றங்கள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.