ஐரோப்பியாவில் சாரதி அனுமதி பத்திரங்களில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாகன சாரதி அனுமதி பத்திரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமானது வாகன சாரதி அனுமதி பத்திரத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக சமீப காலங்களாக தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்துடைய சில ஆலோசனை அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது புதிய உத்தேச சட்டத்தின் படி கட்டாய உடல் நல பரிசோதனை மற்றும் வாகன சாரதி அனுமதி பத்திரமானது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களுக்கு மட்டும் வழங்குவதற்கும்,
மேலும் டிஜிடல் முறையிலான இந்த வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கான ஐரோப்பிய பாராளுமன்றத்துடைய சில பிரதிநிதிகள் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வைத்து இருந்தால் அவர்கள் 5 வருடங்களுக்கு ஒரு தடவை கட்டாய உடல் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ் வாகன சாரதியாக கடமையாற்ற விரும்புகின்றவர்கள் 18 வயதில் இவ்வாறு வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் இந்த சட்டத்தில் சில உத்தேச திருத்தங்களை கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.