புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் உலக மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய தினம் புத்தாண்டு பிறந்த நிலையில் உலக மக்கள் தொகை 8.09 பில்லியனாக மாறியுள்ளது என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் கணித்துள்ளது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் உலக சனத்தொகை 8,092,034,511 ஆக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், 2024 ஜனவரி முதல் திகதியுடன் ஒப்பிடும்போது உலக மக்கள் தொகை 71,178,087 (0.89%) அதிகரித்துள்ளது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை கூறுகிறது.
ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு நொடிக்கும் 4.2 பிறப்புகளும் 2 இறப்புகளும் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 75 மில்லியனாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளர்ச்சியின் சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.