இலங்கையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அதன் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ், இந்த முடிவுகள் மூத்த நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
“உலக சந்தை எரிவாயு விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அத்தகைய வெளியீட்டிற்குப் பிறகு, ஒரு அமைப்பாக, உயர் நிர்வாகத்துடன் இணைந்து, நாங்கள் நிச்சயமாக நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையை வழங்குவோம்.. ஜனவரி மாதத்தில் உலக சந்தை விலைகள் அப்படியே இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருவேளை எதிர்வரும் சில நாட்களில் அது மாறக்கூடும்.. எனவே, பெப்ரவரி மாத எரிவாயு விலை பற்றி இப்போது சொல்வது கடினம்.” என குறிப்பிடப்படுகின்றது.