இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரிப்பதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 217,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 22,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.





