தமிழ்நாட்டின் அமைச்சர்களின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு தகவல்தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, தகவல்தொழில்நுட்பத்துறையில் முன்னணி மாநிலமாக மீண்டும் திகழ பாடுபடப்போவதாக டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021 மே மாதம் 7ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது.
அது முதல் மூன்றாவது முறையாக நேற்று அமைச்சரவை மாற்றம் கண்டது. அதன்படி ஐந்து அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.
அமைச்சர் மனோ தங்கராஜ் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பு ஏற்கிறார். இவர்,மனிதவள மேலாண்மைத் துறைக்கும் பொறுப்பு வகிப்பார்.
தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் சாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட டி.ஆர்.பி.ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் துறையை இதுவரை தங்கம் தென்னரசு கவனித்து வந்தார்.
இத்தகைய சூழலில் அமைச்சரவை மாற்றப்பட்டு புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.