பிரித்தானிய சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – நிபுணர்கள் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிறப்புக்களின் எண்ணிக்கையை விட இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது பிரித்தானியா மக்கள் தொகை வளர்ச்சியை பராமரிக்க குடியேற்றத்தை அதிகளவில் சார்ந்திருக்கும் என்பதை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கருவுறுதல் விகிதங்கள் 2024 இல் 1.4 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது அதிகரித்துவரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக பெரும்பாலான தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே பிறப்பு விகிதங்கள் குறைவடைந்து இறப்பு விகிதங்கள் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





