செய்தி

அமெரிக்கா, சீனா முடிவால் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை 90 நாள்களுக்கு ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து பங்குச்சந்தைகள் மீட்சி கண்டுள்ளன. வரி ஒத்திவைப்பு மக்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது.

அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் சாத்தியம் தற்போது குறைவாக இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லந்தின் ஜெனீவா (Geneva) நகரில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன.

சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருக்கிறது.

சீனா, அமெரிக்கப் பொருள்கள் மீது விதித்துள்ள 125 சதவீத வரியை 10 சதவீதம் வரை குறைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு S&P 500இன் பங்குகள் ஆக அதிகமாக மூன்று சதவீதம் அதிகரித்தன. Dow Jones தொழிலியல் குறியீடு 1,100 புள்ளிகள் ஏற்றம் கண்டன.

Nasdaq பங்குகள் ஆக அதிகமாக 4 சதவீதம் கூடியது. இருப்பினும் விநியோகத் தொடர்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், நிறுவனங்களின் வருமானம் ஆகியவற்றால் எழுந்துள்ள கவலைகளை வரி ஒத்திவைப்பு முழுமையாகத் தணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி