இலங்கை காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
![](https://iftamil.com/wp-content/uploads/2024/12/rainfull-srilanka.jpg)
இலங்கையில் சில இடங்களில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)