இலங்கையில் உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
																																		அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உணவு விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)
                                    
        



                        
                            
