ஐரோப்பா

ஜெர்மனியில் பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜெர்மனியில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருட்களின் விலை குறைப்பு ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் அடுத்த சான்சலராக கருதப்படும் பிரெட்ரிக் மெர்ஸ், பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க ஆர்வம் காட்டுகின்றார்.

அடிப்படை உணவுகள் மட்டுமன்றி அனைத்து உணவுகளுக்கும் வற் வரியை ஏழு சதவீதமாகக் குறைக்க உள்ளதாக அவர் உறுதியளித்திருந்தார்.

மெர்ஸ் இந்தத் திட்டத்தை அவர் கலந்துகொண்ட ஒரு வணிக நிகழ்வில் அறிவித்திருந்தார்ர். ஜெர்மனியில் பல உணவுகளுக்கு ஏற்கனவே குறைந்த வற் விகிதமே காணப்படுகின்றது.

பாஸ்தா, இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்ற அதிகம் நுகரப்படும் பல பொருட்களுக்கு ஏற்கனவே குறைந்த விகிதத்திலேயே வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் அதிகம் நுகரப்படும் பொருட்களில் பாஸ்தா, சொக்லேட், உறைந்த இறைச்சி, கோப்பி, தண்ணீர் போத்தல் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவை அடங்கும்.

இவற்றிற்கு ஏற்கனவே குறைந்த அளவிலேயே வரி விதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு வற் வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

மெர்ஸ்ஸின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் குறித்த பொருட்களின் விலை மேலும் குறைவடையும்.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்