இலங்கையில் இன்றிரவு வானிலையில் ஏற்படும் மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.





