இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததன் பின்னர்,  தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,461 ஆக பதிவாகியுள்ளது.

உலக தங்க விலையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை  3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்று காலை கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” பவுண் ஒன்றின் விலை  337,600 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி  327,500  ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், ஜனவரி 1 ஆம் திகதி  354,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை இன்று  365,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!