இலங்கையில் காலணி மற்றும் பைகளின் விலைகளில் மாற்றம்!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணி மற்றும் பைகள் ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினை தொடர்ந்து காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது. இதனால் காலணிகள் மற்றும் பைகளின் விலை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 20 times, 1 visits today)