இலங்கை

இலங்கையில் அடையாள அட்டைகளுக்கான புகைப்படக் கட்டணத்தில் மாற்றம்!

அடையாள அட்டை புகைப்படத்திற்கான கட்டணத்தை அதிகரித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலுக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்பட நகல் எடுப்பதற்கு பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச கட்டணம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகல் நகலைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்லைன் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.

மேலும், வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!