ஈரான் அதிபரின் மரணத்திற்குப் பிறகு எண்ணெய் விலையில் மாற்றம்

முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஈரானின் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததையடுத்தும்,உடல்நலம் குறைவால் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஜப்பான் பயணத்தை ரத்து செய்ததை அடுத்தும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 41 சென்ட் அல்லது 0.5% அதிகரித்து, 0632 GMT க்குள் ஒரு பீப்பாய்க்கு $84.39 ஐ எட்டியது.
அதேபோல், ஜூன் மாதத்திற்கான யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 23 சென்ட்கள் அதிகரித்து $80.29 ஆக இருந்தது,
(Visited 16 times, 1 visits today)