சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் – எரிவாயு விலையில் மாற்றம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/shell-oils-lubricants-header-1296x700.webp)
சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.598 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.75 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
(Visited 1 times, 1 visits today)