பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமா?
பிரித்தானியாவில் பணவீக்கமானது கடந்த செப்டம்பர் மாதம் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எரிசக்தி விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் உணவு விலை பணவீக்கத்தில் ஏற்பட்ட மந்த நிலையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பணவீக்க நிலையை வரவேற்றுள்ள நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் விலைகளைக் குறைக்க இன்னும் அதிகமாகச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து வருவதால் டிசம்பர் மாதத்தில் இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
(Visited 5 times, 5 visits today)




