சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெயின் விலை 20 சதவீதம் இழப்பை பதிவு செய்துள்ளது.
போர்கள், அதிக கட்டணங்கள், OPEC+ உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் இந்நடவடிக்கைகள் உந்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 19 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்தது. அதேபோல் யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் (U.S. West Texas) இடைநிலை கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 20 சதவீதம் வருடாந்திர சரிவைப் பதிவு செய்தது.
தரவுகளுக்கு அமைய நேற்றைய தினம் , பிரெண்ட் ஃப்யூச்சர்ஸ் (Brent futures) ஒரு பீப்பாய்க்கு $60.85 ஆக பதிவாகியுள்ளது. US WTI கச்சா எண்ணெய் 53 சென்ட்கள் அல்லது 0.9% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $57.42 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





