சீனாவில் ஏற்படவுள்ள மாற்றம் – மீண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை
சீனாவில் சனத்தொகை மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனாவில் நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு ‘டிராகன் ஆண்டு’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்த சீனாவின் சனத்தொகை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என, சீனாவின் சனத்தொகை தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சனத்தொகை குறைந்து வருவது அந்நாட்டு அரசை கவலையடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, சீனாவின் சனத்தொகை 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 2.08 மில்லியன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 12 ராசிகளின் சுழற்சியின்படி, சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் அந்த அறிகுறிகளைக் குறிக்கும் விலங்குகளின் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டின் ராசி விலங்கு டிராகன் என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் நாக வருடத்தில் பிறக்கும் குழந்தைகள் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கை சீன மக்களிடையே நிலவுவதாகவும், கடந்த 2012 ஆம் ஆண்டு நாகத்தின் கடைசி ஆண்டாக அந்நாட்டின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.