மாற்றம் தொடங்கிவிட்டது – பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்று அரசாங்கத்தை அமைத்துள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்றதும் 10 டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்திலிருந்து அவர் உரையாற்றியுள்ளார்.
“மாற்றம் தொடங்கிவிட்டது. ஆனால் சந்தேகம் வேண்டாம், பிரித்தானியாவை சீரமைப்போம்” என்று அவர் கூறினார்.
அரசியல் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போவதாகவும் அரசாங்கச் சேவையை மீண்டும் கட்டி எழுப்பப் போவதாகவும் அவர் கூறினார்.
சாதாரண மனிதனை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் பிரித்தானியாவை செங்கல் செங்கல்லாக மீண்டும் கட்டப் போவதாகவும் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார்.





