நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 40 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு சந்திரனில் தரையிறங்கியது.
இஸ்ரோ தானியங்கி தரையிறங்கும் வரிசையை மாலை 5.44 மணிக்கு தொடங்கியது. விக்ரம் லேண்டர் இப்போது அதன் ஆன்போர்டு கம்ப்யூட்டர்கள் மற்றும் லாஜிக்கைப் பயன்படுத்தி நிலவில் மென்மையாக தரையிறங்கியது.
அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் திகதி விடுவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.