சந்திரனில் தரையிறங்கும் சந்திரயான் 3! இஸ்ரோ தலைவர்
திட்டமிட்டபடி சந்திரயான் 3 ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும். அனைத்து விதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் வகையில் விக்ரம் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்சார்கள் செயலிழந்தாலும், வெற்றிகரமாக இலக்கை எட்டும் திறன் உள்ளது என கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் ஏவியது.
இந்த சந்திரயான் வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.