மோடி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு – இந்திய பங்குச் சந்தையும் வேகமான வளர்ச்சி

இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்யும் என்ற கருத்துடன், நாட்டின் பங்குச் சந்தையும் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
07 கட்டங்களாக நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.
பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும், மேலும் பாஜக 365 இடங்களை கைப்பற்றும் என தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(Visited 29 times, 1 visits today)