செய்தி விளையாட்டு

2024 IPL துவக்க விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் உலகம் முழுக்க பிரபலமான கிரிக்கெட் தொடர் எனலாம். கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக ஐ.பி.எல். பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். துவக்க விழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.

2024 ஐ.பி.எல். தொடரின் துவக்க விழா சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் ஏ.ஆர். ரகுமான், சோனு நிகம், டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து இந்த சீசனின் முதல் போட்டி துவங்கும். அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி