இலங்கை

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க களமிறங்கும் பிரபலங்கள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024 ஜனவரியில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.

இது விடயம் சம்பந்தமாக கொழும்பில் கடந்தவாரம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவண்ண, நளின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. அவ்வேளையிலேயே முதலாவது கூட்டத்தை ஜனவரி 19 ஆம் திகதி நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டுள்ளது.

அதுவரை புதிய அரசியல் கூட்டணி குறித்து கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் 2024 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்