உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தம்; பதில் அளித்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் தனது பதிலை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளது.

கத்தார் மற்றும் எகிப்தில் உள்ள தனது சகோதரர்களுக்கு பதில் அளிக்கப்பட்டதாக ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விரிவான மற்றும் முழுமையான போர்நிறுத்தமே இதற்குப் பதில் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பாரிசில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் வரைவு போர்நிறுத்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.

வரைவு ஒப்பந்தம் இரண்டு மாத தற்காலிக போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதையும், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கூறுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!