டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்.. – ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த தகவலை மறுத்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. மேலும் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஊடகம் இந்த செய்தியை வெளியிடுவதற்கு சற்று முன்பு கூட ஈரானின் ஏவுகணை தெற்கு இஸ்ரேலை தாக்கியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவும், ஈரானும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் எந்த நிலைபாட்டை எடுக்கப்போகிறது என்பது கேள்வியாக உள்ளது.