அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு
கம்பளை – அம்புலுவாவ மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு சுற்றாடல் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை மற்றும் ஆபத்துகளைக் கருத்திற்கொண்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து ஆராய விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதுடன், முறையான அறிக்கை கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க அனுமதி வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் விரைவில் களப்பயணம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.





