இலங்கையில் பேரூந்துகள் அனைத்திலும் CCTV கமராக்கள்

இலங்கையில் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேரூந்துகளிலும் CCTV கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(Visited 19 times, 1 visits today)