விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில கேள்விகளை கேட்பதற்காக நாளையும் அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப்பட்டது.
அதில் 12 ஆம் திகதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கமைய த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார்.
காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஹோட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் மீண்டும் காரில் புறப்பட்டார்.
அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80 க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.





