வாழ்வியல்

ஒற்றைத் தலைவலிக்கான காரணம் – தற்காத்துக் கொள்வது எப்படி?

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி ஆண்களை விட, பெண்களையே அதிகம் தாக்குகிறது. இது சாதாரண தலைவலி போல் இருக்காது. பெரும்பாலும் தைலம் தடவினாலோ, மாத்திரை போட்டாலோ ஒரு மணி நேரத்தில் சரியாகும் தலைவலி போல இல்லாமல், ஒற்றைத் தலைவலி ஒரு நாள் முழுக்கவோ அல்லது இரண்டு நாள் முழுக்கவோ பாடாய்ப்படுத்தி விட்டுத்தான் ஓயும்.

Migraine Headaches - When to visit the ER - Elitecare Emergency Hospital

எட்டு வருடங்களாக என்னுடன் கைகோர்த்துக்கொண்ட மைக்ரேன், மாதம் ஒரு முறையோ இரு முறையோ அழையா விருந்தாளியாக வந்து என்னுடன் தங்கி விடும். அப்போதெல்லாம் வாந்தி, தலைசுற்றல், தலையின் இரு புறமும் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி, கண்கள் மீது செங்கல்லை வைத்தது போன்ற உணர்வும் ஏற்படும்.

How Can I Get Rid Of Migraine Headache?

எனது தோழியர் சிலருக்கும் இந்தத் தொல்லை இருக்கிறது. முகம் அறியா தோழிகளுக்கும், தோழர்களுக்கும் கூட இந்தப் பிரச்னை இருக்கலாம். என் அனுபவத்தில் எந்த மாதிரியான சூழலில் எனக்கு மைக்ரேன் வருகிறது, அந்த மாதிரி நேரங்களில் என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்துள்ளேன்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, சரியான சமயத்தில் சாப்பிடாதது, கார், பஸ் பயணங்களில் ஜன்னலை ஏற்றி விட்டு காற்றில்லாமல் இருப்பது, இரவு சரியான தூக்கம் இல்லாதபோது, அதிக மன அழுத்தம் இருக்கும்போது, அதிக சத்தம், இரைச்சல் போன்றவை ஒற்றைத் தலைவலியை கைப்பிடித்து அழைத்து வந்து விடும்.

Migraines: Not Just a Headache - Advancing Your Health

முட்டை, மாமிச உணவுகள், சிட்ரஸ் அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, புளி சேர்த்த உணவுகள், பீட்ரூட், முள்ளங்கி, முருங்கைக்கீரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், காபி, புரோட்டீன் அதிகமுள்ள சுண்டல், பருப்பு வகைகள், எண்ணையில் பொறித்த மற்றும் மசாலா உணவுகள், பேக்கரி வகைகள், பிரியாணி, பரோட்டா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கவே செய்யும்.

The cause of migraine: it's all in your brain! The electrical and chemical  sides of migraine - Migraine Canada™

நீர்க்காய்களான சுரைக்காய், பீர்க்கை, புடலை, மோர் சாதம், அரிசிக்கஞ்சி போன்றவை தலைவலியைக் குறைக்கும். செல்போன், டி.வி, கணினி பயன்பாட்டை அறவே தவிர்த்து விட வேண்டும். புத்தகம் வசித்தலும் கூடாது. கண்களுக்கு முழுமையான ஓய்வு அவசியம். மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மனத்தை அமைதியாக வைக்க வேண்டும். இரவு சீக்கிரமே உறங்க வேண்டும். மறுநாள் காலையில் விழித்தெழும்போது மைக்ரேன் போயே போயிருக்கும்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான