தாய்லந்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பூனை கைது

தாய்லந்தில் மீட்கப்பட்ட பூனை ஒன்று பொலிஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து தாக்கியதால் அதிகாரிகள் அதனைக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தைக் காட்டும் படங்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
தொலைந்துபோன அந்த அமெரிக்க ‘shorthair’ ரகப் பூனையை ஒருவர் கண்டுபிடித்து அதனைக் பொலிஸார் ஒப்படைத்தார்.
அந்தப் பூனையோ பொலிஸ் அதிகாரிகளைக் கடித்ததோடு விடாமல் நகத்தால் கீறியுள்ளது. இந்தப் பூனை பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பதிவை நீங்கள் பகிர்ந்தால் அதன் உரிமையாளர் இங்கு வந்து பூனையை அழைத்துச் செல்லலாம்.
அது பிணையில் விடுவிக்கப்படலாம் என அதிகாரி நகைச்சுவையாக எழுதியிருந்தார். மறுநாள் பூனையின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பூனையைத் திரும்பப்பெற்றார்.
(Visited 4 times, 4 visits today)