மூன்றாவது ஜெனீவா ஓபன் பட்டத்தை வென்ற கேஸ்பர் ரூட்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.
இதில் கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
காஸ்பர் ரூட் நான்கு ஆண்டுகளில் தனது மூன்றாவது ஜெனிவா ஓபன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
ரூட் இப்போது பிரெஞ்சு ஓபனுக்காக பாரிஸுக்குச் செல்கிறார், அங்கு அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தோற்கடிக்கப்பட்ட இறுதிப் போட்டியாளராக இருந்தார்
(Visited 21 times, 1 visits today)