இலங்கையில் நீதிமன்ற வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பாரிய திருட்டு
வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களை வைக்கும் அறையில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதிலிருந்து 02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா திருடப்படச் சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
வாரியப்பொல நீதவான் நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவரினால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





