நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு

கடந்த மாதம் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்த நேபாள இளைஞர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காத்மாண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்து ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட மரணங்களுக்கு அவர்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “அரசு முகவர்கள் செய்த கடுமையான குற்றம் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது, உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதால், நீதிபதி கௌரி பகதூர் கார்கி தலைமையிலான உயர்மட்ட நீதித்துறை புலனாய்வு ஆணையத்திற்கு இளைஞர்களின் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8 அன்று ஆரம்பமான போராட்டங்களில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.