சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடர்பான வழக்கு விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆரம்பித்துள்ளது.
ஊழல் உள்ளிட்ட 35 குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் எதிர்நோக்குகிறார்.
செல்வந்தர் ஓங் பெங் செங்கிடமிருந்து ஈஸ்வரன் விலை மதிப்புள்ள பொருள்களைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.
எட்டு மாதங்களுக்கு முன் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன் ஓர் அமைச்சர் ஊழல் விசாரணையை எதிர்கொண்டார்.
தற்போது திரு ஈஸ்வரன் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கிறார்.
சிங்கப்பூரர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
(Visited 34 times, 1 visits today)