Telegram மீது வழக்கு – இந்திய நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
Telegram நிறுவனம் மீதும் இணைய ஊடுருவி ஒருவர் மீதும், இந்தியாவின் முன்னணிக் காப்புறுதி நிறுவனமான Star Health, வழக்குத் தொடுத்துள்ளது.
Telegram செயலியில் chatbots அம்சத்தைப் பயன்படுத்தி இணைய ஊடுருவி ஒருவர் காப்புறுதித் திட்டத்தை வைத்திருப்போரின் தனிப்பட்ட விவரங்களையும் மருத்துவ அறிக்கைகளையும் கசியவிட்டார்.
தரவுகளை இணையத்தில் வெளியிடும் chatbots அம்சங்களை அல்லது இணையப்பக்கங்களை Telegram நிறுவனம் தடை செய்யும் உத்தரவை Star நிறுவனம் நீதிமன்றத்திடமிருந்து பெற்றுள்ளது.
Star நிறுவனம் சம்பவம் குறித்துப் பொது அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான இணைய ஊடுருவல் என்றும் ரகசியமான தகவல்கள் அதிகாரமின்றி எடுக்கப்பட்டன என்றும் Star நிறுவனம் நடந்த சம்பவத்தைப் பற்றி அதில் வருணித்திருந்தது.
(Visited 5 times, 1 visits today)