US – வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் நியமனம்!
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக 27 வயதான கரோலின் லீவிட் என்பவரை நியமித்துள்ளார்.
அதன்படி, அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட இளம் பெண் இவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய நியமனத்தை மேற்கொள்ளும் போது, திறமையான தொடர்பாளரான கரோலின், பதவிக்கான கடமைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு மற்றும் அரசியல் அறிவியல் மாணவியான கரோலின் லீவிட், 2019 ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் பத்திரிகை அலுவலகத்தில் இணைக்கப்பட்டார்.





