பிரித்தானியாவில் தீப்பிடித்து எரிந்த கேரவன் : சிறுமி உள்பட இருவர் பலி!
பிரித்தானியாவில் லிங்கன்ஷையரின் ஸ்கெக்னஸ் அருகே கேரவன் ஒன்று தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று (05.04) அதிகாலை 3.53 மணிக்கு இங்கோல்ட்மெல்ஸ் கிராமத்தில் உள்ள கோல்டன் பீச் ஹாலிடே பார்க்கில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், இருப்பினும் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 10 மற்றும் 48 வயதுடையவர்கள் என அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
மேலும் இரண்டு தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளதாக மேலும் கூறியுள்ளனர்.
(Visited 27 times, 1 visits today)





