பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள் – மக்களின் கவனத்திற்கு!!
பிரித்தானியாவில் விமான நிலைய பார்க்கிங்கை இலக்காகக் கொண்ட கார் திருட்டுகள் அதிகரித்து வருவது தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பயணிகள் “அதிகாரப்பூர்வமற்ற” நீண்ட கால பார்க்கிங் நடத்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிறுவன விதிகளை மீறாத வரை எவரும் பார்க்கிங் ஆபரேட்டராக (operator) வர்த்தகம் செய்யலாம்.
மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கவில்லை, இதனால் கட்டுமான தளங்கள் அல்லது வயல்கள் போன்ற பாதுகாப்பற்ற நிலங்களில் இடவசதியை செய்துக் கொடுக்கிறார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சசெக்ஸ் காவல்துறை மற்றும் கேட்விக் விமான நிலையம் (Gatwick Airport) ஆகிய இரண்டும் இது தொடர்பில் எடுத்துரைத்துள்ளன.
அவர்கள் அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லாமல் விமான நிலைய பெயர்களைப் பயன்படுத்தலாம் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





