புளோரிடாவில் மதுபானக் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் மீது மோதிய கார் – நால்வர் மரணம்
புளோரிடாவின்(Florida) டம்பாவில்(Tampa) ஒரு மதுபானக் கடைக்கு வெளியே மக்கள் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
டம்பாவில் உள்ள நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் ஒட்டி செல்லப்பட்ட காரை காவல்துறையினர் நிறுத்த முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 11 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புளோரிடாவின் டேட்(Dade) நகரத்தைச் சேர்ந்த 22 வயதான சைலாஸ் சாம்ப்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)





