உத்தரபிரதேசத்தில் கார் கவிழ்ந்து விபத்து – 3 நேபாள குடிமக்கள் பலி

வாரணாசி நோக்கிச் சென்ற எஸ்யூவி கார், சைக்கிள் ஓட்டுநரைத் தவிர்க்க முயன்றபோது கவிழ்ந்ததில், மூன்று நேபாள குடிமக்கள் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக பஹ்ரைச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் டாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உட்பட 10 பேரை ஏற்றிச் சென்ற வாகனம், ஜார்வா காவல் நிலையப் பகுதியில், வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக துளசிபூர் வட்ட அதிகாரி (சிஓ) பிரிஜ் நந்தன் ராய் தெரிவித்தார்.
“நாகை பசைதி கிராமத்திற்கு அருகே சைக்கிள் ஓட்டுநரைத் தவிர்க்க முயன்றபோது ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். வாகனம் கவிழ்ந்ததால், 70 வயது பிரவீர் காத்ரி என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
38 வயது யுவராஜ் மற்றும் 80 வயது தன்பாலி ஆகியோர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர், மீதமுள்ள நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அதிகாரி குறிப்பிட்டார்.