இந்தியா

Google Maps தவறான வழிக்காட்டுதலால் 30 அடி பாலத்தில் இருந்து விழுந்த கார் : மூவர் பலி!

இந்தியாவில் கட்டிமுடிக்கப்படாத 30 அடி பாலத்தில்  இருந்து கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  கூகுள் மேப்பின் வழிக்காட்டுதலின் கீழ் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமண வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. ள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளது.

கவுஷல் குமாய், விவேக் குமார் மற்றும் அமித் குமார் ஆகியோரே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில்,  பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் Google Maps புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

உள்ளூர் வட்ட அதிகாரி அசுதோஷ் ஷிவம், கட்டுமானத்தில் உள்ள பாலத்திற்கு அருகில் பாதுகாப்புத் தடைகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் இல்லாதது சோகமான சம்பவத்திற்கு பங்களித்தது என்று சுட்டிக்காட்டினார்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!