வெள்ளை மாளிகை பாதுகாப்பு வாயிலில் மோதிய கார் – ஓட்டுநர் கைது

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள தடுப்பு சுவர் மீது காரை மோதிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை தெரிவித்துள்ளது.
ஓட்டுநரின் அடையாளம் அல்லது விபத்திற்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
சம்பவத்திற்கு பிறகு குறித்த நபர் மனநல மதிப்பீட்டிற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல் மற்றும் அரசாங்க சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 5 times, 5 visits today)