சீனாவில் பாடசாலை மீது மோதிய கார் – படுகாயமடைந்த மாணவர்கள்

சீனாவின் ஹூனான் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு வெளியே கார் மோதியதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிள்ளைகள் பதற்றத்தில் ஓடுவதும் காயமுற்ற சிலர் தரையில் கிடப்பதும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் தெரிந்தது.
இன்னொரு காணொளியில் நபர் ஒரு வழிப்போக்கர்களால் அடிக்கப்படுவது தெரிகிறது.
அவர் SUV ரகக் காருக்குப் பக்கத்தில் தரையில் கிடக்கக் காணப்பட்டார். சீனாவில் கூட்டத்துக்குள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சென்ற வாரம் சூஹாய் (Zhuhai) நகரில் நபர் ஒருவர் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
(Visited 22 times, 1 visits today)