லிவர்ப்பூல் வெற்றிப் பேரணி மீது மோதிய கார் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

லிவர்ப்பூல் வெற்றிப் பேரணி மீது கார் மோதிய சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்ட 53 வயது நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலை முயற்சி, ஆபத்தான முறையில் காரை ஓட்டியது, போதைப்பொருள் உட்கொண்ட பிறகு காரை ஓட்டியது ஆகிய சந்தேகத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பிரித்தானிய பொலிஸார் அந்த விவரங்களை வழங்கியது.
11 பேர் மருத்துமனையில் இருப்பதாகவும் அவர்களுடைய நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் பயங்கரவாதச் செயல் இல்லை என்றும் அது தனிப்பட்ட செயல் என்றும் நம்புவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவருக்கு உதவ அவசர மருத்துவ உதவி வாகனம் மூடப்பட்ட சாலைக்குள் நுழைந்திருக்கிறது.
அப்போது மோதலில் சம்பந்தப்பட்ட கார் அவசர மருத்துவ உதவி வாகனத்தைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்பட்டது.
லிவர்ப்பூல் விசிறிகள் கூட்டமாகக் கூடியிருந்த போது கார் அவர்கள் மீது மோதியது.
பலர் காற்றில் பறந்தனர். குறைந்தது நால்வர் காரோடு தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டனர்.
கார் நிறுத்தப்பட்டவுடன் பொதுமக்கள் கோபத்துடன் காரின் சன்னல்களை உடைக்கத் தொடங்கினர்.