ஜெர்மனியில் பொது மக்கள் மீது மோதிய கார் – நீடிக்கும் மர்மம்
ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மென்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் வீதியில் இந்த கார் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கார் தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததுடன், சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனர்.
இது தொடா்பாக ஜெர்மனியைச் சோ்ந்த 50 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகும் தாக்குதலுக்கான காரணத்தை அவர் கூறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் தாக்குதலின் நோக்கம் குறித்து மர்மம் நீடித்துவருகிறது.





